வேற்றுமை

Dinesh.B.Sc
By -
0

 


வேற்றுமை

v  பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்கிறோம்.

v  ஒரு வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொல்லுடன் சில எழுத்துக்கள் (உருபுகள்) சேரும்போது, அந்தப் பெயர்ச்சொல்லின் பொருள் மாறுகிறது. இப்படிப் பெயர்ச்சொல்லின் பொருளை மாற்ற அல்லது வேறுபடுத்த உதவும் அந்த எழுத்துக்களையே வேற்றுமை உருபுகள் என்கிறோம்.

v  வேற்றுமை மொத்தம் எட்டு வகைப்படும்.

v  இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.

1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)

v  எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.

v  எழுவாய் ஒரு செயலைச் செய்வதைக் காட்டும்.

v  உருபு: இல்லை.

v  உதாரணம்: பாவையர் வந்தனர்.

 

அம்சம்

வேற்றுமை உருபு

சொல்லுருபு

விளக்கம்

சொல்லின் இறுதியில் இணைந்து வரும் சிறிய எழுத்து அல்லது அசையாகும்.

வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாக வரும் முழுமையான சொற்களாகும்.

தன்மை

இது தனியாக நின்றால் பொருள் தராது; சொல்லோடு சேர்ந்தே வரும்.

இவை தனிச் சொற்களாக நின்று பொருள் தரக்கூடியவை.

அமைப்பு

சொல்லுடன் ஒட்டி வரும்.

சொல்லுக்குப் பின்னால் தனித்து வரும்.

உதாரணம்

தூரிகையால் ஓவியம் தீட்டினார். ('ஆல்' என்பது உருபு)

தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். ('கொண்டு' என்பது சொல்லுருபு)

முல்லைக்குத் தேர் கொடுத்தான். ('கு' என்பது உருபு)

முல்லைப் பொருட்டுத் தேர் கொடுத்தான். ('பொருட்டு' என்பது சொல்லுருபு)

 

2. இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை)

v  ஒரு பெயர்ச்சொல்லைச் செயப்படுபொருளாக (Object) மாற்றிக் காட்டுவது இரண்டாம் வேற்றுமை.

v  ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என 6 பொருட்களில் வரும்.

v  உருபு :

v  உதாரணங்கள்:

Ø  ஆக்கல்: கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

Ø  அழித்தல்: பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்.

Ø  உடைமை: அவர் செல்வத்தைப் பெற்றார்.

3. மூன்றாம் வேற்றுமை (கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி)

v  கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி  பொருட்களில் வரும்.

v  உருபுகள்: ஆல், ஆன், ஒடு, ஓடு

v  உதாரணங்கள்:

Ø  கருவி: மரத்தால் சிலை செய்தான் (ஆல்).

Ø  கருத்தா: சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது (ஆல்).

Ø  உடனிகழ்ச்சி: தாயொடு குழந்தை சென்றது (ஒடு).

v  சொல்லுருபுகள்: கொண்டு, வைத்து, உடன், மூலம்.

 

4. நான்காம் வேற்றுமை (கொடை, தகுதி, பகை...)

v  உருபு: கு

v  பொருள்கள் (8 வகைகள்):

Ø  கொடை: முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.

Ø  பகை: புகை மனிதனுக்குப் பகை.

Ø  நட்பு: கபிலருக்கு நண்பர் பரணர்.

Ø  தகுதி: கவிதைக்குகு அழகூட்டுவது எது? (தகுதி)

Ø  அதுவாதல்: தயிருக்குகுப் பால் வாங்கினான்.

Ø  பொருட்டு: கூலிக்குகு வேலை செய்தான்.

Ø  முறை: ராமனுக்குகுத் தம்பி லக்குவன்.

Ø  எல்லை: தமிழ்நாட்டிற்குகு வடக்கே ஆந்திரா.

v  சொல்லுருபுகள்: பொருட்டு, நிமித்தம், ஆக.

5. ஐந்தாம் வேற்றுமை (நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது)

v  உருபு: இன், இல்

v  பொருள்கள்:

Ø  நீங்கல்: தலையின் இன் இழிந்த மயிர். (பிரிதல்)

Ø  ஒப்பு: பாலின் இன் நிறம் வெள்ளை. (ஒப்பிடுதல்)

Ø  எல்லை: தமிழ்நாட்டின் இன் கிழக்குக் கடல்.

Ø  ஏது (காரணம்) : கல்வியின் இன் சிறந்தவர் இல்லை.

v  சொல்லுருபுகள்: இருந்து, நின்று, விட, காட்டிலும்.

6. ஆறாம் வேற்றுமை (உரிமை / கிழமை வேற்றுமை)

v  ஒரு பொருளுக்கும் அதன் உரிமையாளருக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும்.

v  உருபு: அது, ஆது, அ

v  உதாரணங்கள்:

Ø  அது: எனது புத்தகம், ராமனுடைய தம்பி.

Ø  ஆது, அ: இவை தற்போது வழக்கத்தில் இல்லை (எனது கைய - அ).

v  சொல்லுருபுகள்: உடைய.

7. ஏழாம் வேற்றுமை (இட வேற்றுமை)

v  இடம் மற்றும் காலத்தைக் குறித்து வரும்.

v  உருபு: கண் (மேலும் இல், மேல், கீழ், இடம் போன்றவை வரும்).

v  உதாரணங்கள்:

Ø  இடம்: ஊரின் கண் ஒரு கோயில் உள்ளது.

Ø  காலம்: இரவின் கண் மழை பெய்தது.

முக்கியக் குறிப்பு: ஐந்தாம் வேற்றுமை 'இல்' என்பது நீங்கல் பொருளில் வரும்; ஏழாம் வேற்றுமை 'இல்' என்பது இடப்பொருளில் வரும். (எ.கா: வீட்டில் இருக்கிறான்).

8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

v  படர்க்கைப் பெயரை முன்னிலை பெயராக மாற்றி அழைப்பதாகும். பெயரின் இறுதி எழுத்து திரிந்து வரும்.

v  உருபு: இல்லை.

v  உதாரணம்:

Ø  நண்பன் à நண்பா!

Ø  தம்பி à தம்பீ!

Ø  அண்ணன் à அண்ணா!

 

 வேற்றுமை சந்தேகங்களைத் தீர்க்கும் சில குறிப்புகள்

5-ஆம் வேற்றுமை (நீங்கல் பொருள்) :

Ø  கேள்வி: எங்கிருந்து விழுந்தது? எங்கிருந்து பிரிந்தது?

Ø  பதில்: 'இல்' என்று வந்தால் அது 5-ஆம் வேற்றுமை.

Ø  உதாரணம்: மலையின் (இல்) வீழ் அருவி. (மலையில் இருந்து அருவி கீழே விழுகிறது - அருவி மலையை விட்டுப் பிரிகிறது).

7-ஆம் வேற்றுமை (இடப்பொருள்) :

Ø  கேள்வி: எங்கே இருக்கிறது? எந்த இடத்தில் உள்ளது?

Ø  பதில்: 'இல்' என்று வந்தால் அது 7-ஆம் வேற்றுமை.

Ø  உதாரணம்: பெட்டியின் (இல்) பணம் உள்ளது. (பணம் பெட்டிக்குள் இருக்கிறது - அங்கே இடம் தான் முக்கியம்).

         

          நீங்கள் ஒரு வாக்கியத்தைப் படிக்கும்போது, அந்த 'இல்' என்ற இடத்தில் 'இருந்து' என்ற சொல்லைப் போட்டுப் பாருங்கள். பொருள் சரியாக வந்தால் அது 5-ஆம் வேற்றுமை. 'இருந்து' என்று போட முடியாமல் 'இடத்தில்' என்று போட முடிந்தால் அது 7-ஆம் வேற்றுமை.

உதாரணம்:

  • ரிலிருந்து வந்தான் (சரியாக உள்ளது - 5-ஆம் வேற்றுமை).
  • வீட்டிடத்தில் இருக்கிறான் (சரியாக உள்ளது - 7-ஆம் வேற்றுமை).

வேற்றுமை

உருபு

சொல்லுருபு

பொருள் (பயன்)

உதாரணம்

முதல் (எழுவாய்)

இல்லை

ஆனவன், ஆவான், ஆகின்றவன்

பயனிலை ஏற்றல்

கண்ணன் வந்தான்.

இரண்டாம்

இல்லை

செயப்படுபொருள்

அவனைப் பார்த்தேன்.

மூன்றாம்

ஆல், ஆன், ஒடு, ஓடு

கொண்டு, வைத்து, உடன், கூட

கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி

மரத்தால் செய்தான். தாயோடு சென்றான்.

நான்காம்

கு

ஆக, பொருட்டு, நிமித்தம்

கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், முறை, எல்லை

முல்லைக்குத் தேர் கொடுத்தான்.

ஐந்தாம்

இல், இன்

இருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும்

நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது

ரிலிருந்து வந்தான். பாலின் இன் நிறம் வெள்ளை.

ஆறாம்

அது, ஆது, அ

உடைய

கிழமை (உரிமை)

எனது புத்தகம்.

ஏழாம்

கண்

இல், மேல், கீழ், இடம்

இடம், காலம்

வீட்டின் கண் உள்ளது. இரவின் கண் மழை.

எட்டாம் (விளி)

இல்லை

இல்லை

விளி (அழைத்தல்)

நண்பா வா!

 

 


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!