புணர்ச்சி

Dinesh.B.Sc
By -
0


 புணர்ச்சி

          தமிழ், அமுதம் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துச் சொல்லிப் பாருங்கள். தமிழமுதம் என்று ஒலிக்கிறது அல்லவா?

          இவற்றுள் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும் அதனுடன் வந்து சேரும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இவ்விரு சொற்களும் சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைகின்றன. இவ்வாறு நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.

இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்

இயல்பு புணர்ச்சி :

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை.)

உடல் + ஓம்பல் = உடலோம்பல் (இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய் எழுத்து ஆயிற்று. புதிய எழுத்து எதுவும் தோன்றவோ வேறு எழுத்தாகத் திரியவோ மறையவோ இல்லை.)

விகாரப் புணர்ச்சி :

இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

*   நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும். (எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

*   நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும். (எ.கா.) வில் + கொடி = விற்கொடி

*   நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும். (எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

*   இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு. (எ.கா.) நாடகம் + கலை = நாடகக்கலை

இங்குக் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது.

தோன்றல் விகாரத்தின்படி க் என்னும் மெய்யெழுத்து தோன்றியது.

புணர்ச்சி வகை

விளக்கம்

எடுத்துக்காட்டு

குறிப்பு (மாற்றம்)

1. இயல்பு புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது.

1. தாய் + மொழி = தாய்மொழி

எம்மாற்றமும் இல்லை.

2. உடல் + ஓம்பல் = உடலோம்பல்

ல்+ஓ’ இணைந்து ‘லோ’ என இயல்பாகப் புணர்ந்தது (புதிய எழுத்து தோன்றவில்லை).

2. விகாரப் புணர்ச்சி

இரண்டு சொற்கள் இணையும்போது ஏதேனும் மாற்றம் நிகழ்வது. இது மூன்று வகைப்படும்.

(கீழே உள்ள வகைகளைப் பார்க்கவும்)

நிலைமொழி, வருமொழி அல்லது இரண்டிலும் மாற்றம் நிகழும்.

2.1 தோன்றல் விகாரம்

இரு சொற்கள் இணையும்போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது.

தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

த்’ என்னும் மெய்யெழுத்து புதிதாகத் தோன்றியது.

2.2 திரிதல் விகாரம்

ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது.

வில் + கொடி = விற்கொடி

ல்’ என்னும் எழுத்து ‘ற்’ ஆகத் திரிந்தது (மாறியது).

2.3 கெடுதல் விகாரம்

ஓர் எழுத்து மறைந்து விடுவது.

மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

நிலைமொழி ஈற்றில் உள்ள ‘ம்’ மறைந்தது (கெட்டது).

பல விகாரங்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் ஒரே சொல்லில் நிகழ்வது.

நாடகம் + கலை = நாடகக்கலை

1. கெடுதல்:ம்’ மறைந்தது.

2. தோன்றல்:க்’ தோன்றியது.

 

 

 

மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல்

எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.

1.     உயிர்முன் உயிர் - மணி (ண்+இ) + அடி = மணியடி

2.    உயிர்முன் மெய் - பனி + காற்று = பனிக்காற்று

3.    மெய்ம்முன் உயிர் - ஆல் + இலை = ஆலிலை

4.    மெய்ம்முன் மெய் - மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை

எழுத்து வகையால் புணர்ச்சி நான்கு வகைப்படும்.

புணர்ச்சி வகை

விளக்கம் (விதி)

எடுத்துக்காட்டு

குறிப்பு

உயிரீற்றுப் புணர்ச்சி

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக அமைவது.

சிலை + அழகு = சிலையழகு

சிலை (ல் + ) நிலைமொழி ஈறு '' எனும் உயிரெழுத்து.

மெய்யீற்றுப் புணர்ச்சி

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக அமைவது.

மண் + அழகு = மண்ணழகு

ண் நிலைமொழி ஈறு 'ண்' எனும் மெய்யெழுத்து.

உயிர்முதல் புணர்ச்சி

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைவது.

பொன் + உண்டு = பொன்னுண்டு

ண்டு வருமொழி முதல் '' எனும் உயிரெழுத்து.

மெய்முதல் புணர்ச்சி

வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக அமைவது.

பொன் + சிலை = பொற்சிலை

சிலை (ச் + இ) வருமொழி முதல் 'ச்' எனும் மெய்யெழுத்து.

 

மிக முக்கியமான சிறப்பு விதிகள்

 1. உடம்படுமெயப் புணர்ச்சி

          நிலைமொழி ஈற்றில் (சொல்லின் இறுதியில்) உயிரெழுத்து இருந்து, வருமொழி முதலிலும் (அடுத்து வரும் சொல்லின் முதலில்) உயிரெழுத்து வந்தால், அந்த இரண்டு உயிரெழுத்துகளும் இயல்பாக ஒன்று சேரா. அவ்வாறு சேராத இரண்டு உயிரெழுத்துகளையும் ஒன்றாகச் சேர்ப்பதற்கு, இடையில் ஒரு மெய்யெழுத்து தோன்றும். இதனையே உடம்படுமெய் என்பர்.

 

 

இதற்குரிய விதிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

1.1  யகர உடம்படுமெய் (ய்)

 நிலைமொழியின் இறுதியில் , , என்னும் உயிரெழுத்துகள் வந்து, வருமொழியில் 12 உயிரெழுத்துக்களுள் ஏதேனும் ஒன்று வந்தால், அவற்றை இணைக்க இடையில் 'ய்' (யகரம்) தோன்றும்.

 (எ.கா.)

  • மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு (இ + அ = ய)
  • தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி (ஈ + எ = யெ)
  • ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம் (ஐ + ஓ = யோ)

1.2 வகர உடம்படுமெய் (வ்)

, , ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர, பிற உயிரெழுத்துகள் (அ, , , , , , ஔ) நிலைமொழி ஈறாக வரும்போது, வருமொழியில் உயிர் வந்தால், அவற்றை இணைக்க இடையில் 'வ்' (வகரம்) தோன்றும்.

(எ.கா.)

  • பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர் (அ + உ = வு)
  • பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம் (ஆ + இ = வி)

1.3 ஏகார ஈறு (ய் / வ்)

நிலைமொழி ஈறாக '' (ஏகாரம்) வந்து, வருமொழியில் உயிரெழுத்து வந்தால், இடையில் 'ய்' (யகரம்) அல்லது 'வ்' (வகரம்) ஆகிய இரண்டில் ஒன்று உடம்படுமெய்யாக வரும்.

(எ.கா.)

  • தே + ஆரம் = தே + ய் + ஆரம் = தேவாரம் (இங்கு 'வ்' வந்துள்ளது)
  • Text Box: சுருக்கம்:
Ø	இ, ஈ, ஐ வழி à யவ்வும் (ய்)
Ø	ஏனை உயிர் வழி à வவ்வும் (வ்)
Ø	ஏ முன் à இவ்விருமையும் (ய் / வ்)

சே + அடி = சே + ய் + அடி = சேயடி (இங்கு 'ய்' வந்துள்ளது)

இஈ ஐவழி யவ்வும், ஏனை
உயிர்வழி வவ்வும், ஏமுன் இவ் விருமையும்,
உயிர்வரின் உடம்படு மெய் என்று ஆகும்.    (நன்னூல் , 162)

2. குற்றியலுகரப் புணர்ச்சி

          குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாக வரும்போது, வருமொழியின் முதலெழுத்தைப் பொறுத்து இரண்டு விதமான மாற்றங்கள் நிகழும்.

2.1  உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்  (விதி: நன்னூல் 164)

          நிலைமொழியின் இறுதியில் குற்றியலுகரம் இருந்து, வருமொழியின் முதலில் உயிரெழுத்து வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் தான் ஊர்ந்து வந்த மெய்யை விட்டு நீங்கும் (அழிந்துவிடும்). பிறகு தனித்து நிற்கும் மெய், வருமொழி உயிரோடு சேரும்.

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" (நன்னூல் , 164)

 

 

விளக்கம் & சான்று :

1. வட்டு + ஆடினான் = வட்டாடினான்

  • படி 1: வட்டு (வட்+ட்+) + ஆடினான். வருமொழி முதலில் '' (உயிர்) வந்ததால், நிலைமொழி ஈற்று '' கெட்டது.

v  வட்(ட்) + ஆடினான் = வட்ட் + ஆடினான்

  • படி 2: நின்ற மெய்யுடன் வருமொழி உயிர் சேர்ந்தது. (ட் + ஆ = டா). (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே).

v  வட்ட் + ஆடினான் = வட்டாடினான்.

2. மாசு + அற்றார் = மாசற்றார்

  • படி 1: மாசு (மாச்+உ) + அற்றார் à மாச் + அற்றார் ('' கெட்டது).
  • படி 2: மாச் + அற்றார் à மாசற்றார் (ச் + அ = ச).

 

2.2  ஒற்று இரட்டல் (டு, று) (விதி: நன்னூல் 183)

          நெடில்தொடர் குற்றியலுகரம் மற்றும் உயிர்த்தொடர் குற்றியலுகரம் ஆகிய சொற்களின் இறுதியில் 'டு', 'று' ஆகியவை வந்து, அவை வேற்றுமைப் பொருளில் புணரும்போது, அவற்றின் ஒற்று இரட்டித்துப் புணரும்.

Text Box: நிலைமொழி (டு, று) à இரட்டித்து (ட்டு, ற்று) ஆக மாறும்"நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்

டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே." (நன்னூல் , 183)

சான்றுகள்:

அ) நெடில்தொடர் குற்றியலுகரம்:

  • வீடு + தோட்டம்

v  விளக்கம்: 'வீடு' என்பது நெடில்தொடர். இது வேற்றுமையில் புணரும்போது 'டு' என்பது 'ட்டு' என இரட்டிக்கும்.

v  வீடு + தோட்டம் à வீட்டு + தோட்டம் à வீட்டுத்தோட்டம்

  • காடு + மரம்

v  காடு + மரம் à காட்டு + மரம் à காட்டுமரம்

  • ஆறு + நீர்

v  ஆறு + நீர் à ஆற்று + நீர் à ஆற்றுநீர்

  • சோறு + பானை

v  சோறு + பானை à சோற்று + பானை à சோற்றுப்பானை

ஆ) உயிர்த்தொடர் குற்றியலுகரம்:

  • முரடு + காளை

v  'முரடு' என்பது உயிர்த்தொடர். இது புணரும்போது ஒற்று இரட்டிக்கும்.

v  முரடு + காளை à முரட்டு + காளை à முரட்டுக்காளை

  • பகடு + வாழ்க்கை

v  பகடு + வாழ்க்கை à பகட்டு + வாழ்க்கை à பகட்டுவாழ்க்கை

  • வயிறு + பசி

v  வயிறு + பசி à வயிற்று + பசி à வயிற்றுப்பசி

3. முற்றியலுகரப் புணர்ச்சி

          குற்றியலுகரத்தைப் போலவே, நிலைமொழி இறுதியில் வரும் முற்றியலுகரமும், வருமொழி முதலில் உயிரெழுத்து வரும்போது தன் உகரத்தை இழந்து (மெய்யை மட்டும் நிறுத்தி) புணரும்.

(எ.கா.)   வரவறிந்தான் = வரவு + அறிந்தான்

படிநிலைகள்:

  1. பிரித்தல்:

v  வரவு + அறிந்தான்

v  நிலைமொழி 'வரவு' என்பதில் இறுதியில் உள்ள எழுத்து 'வு' (வ் + உ). இது முற்றியலுகரம்.

  1. விதி 1: உகரம் கெடுதல்

v  வருமொழி முதலில் '' (உயிர்) வந்ததால், "முற்றும் அற்று ஒரோவழி" என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள '' மறைந்தது.

v  வரவு (வ் + ~~~~) + அறிந்தான் à வரவ் + அறிந்தான்

  1. விதி 2: மெய் + உயிர் சேருதல்

v  நின்ற மெய் (வ்), வருமொழி உயிர் (அ) உடன் சேர்ந்தது.

v  "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி (வ் + அ = வ), வரவறிந்தான் எனப் புணர்ந்தது.

 

"முற்றும் அற்று ஒரோவழி" (நன்னூல் , 164)

 

4. இயல்பீறு, விதியீறு- புணர்ச்சி

          நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்து (இயல்பாகவோ அல்லது விதிப்படியோ) இருந்து, அடுத்து வரும் சொல்லில் , , , வந்தால் இடையில் ஒற்று மிகும்.

4.1 திரைப்படம் (இயல்பீறு)

  • பிரித்தல்: திரை + படம்
  • விளக்கம்: 'திரை' என்னும் சொல்லைப் பிரித்தால் (திர்+ஐ) அது இயல்பாகவே '' என்னும் உயிரெழுத்தை ஈறாகக் கொண்டுள்ளது.
  • விதி: "இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்" என்னும் விதிப்படி, வல்லொற்று (ப்) மிகுந்தது.
  • சேர்த்தல்: திரை + ப் + படம் = திரைப்படம்.

4.2 மரக்கலம் (விதியீறு)

  • பிரித்தல்: மரம் + கலம்
  • விளக்கம்: 'மரம்' என்னும் சொல்லில் இறுதியில் 'ம்' உள்ளது. இது உயிரீறு ஆக மாற வேண்டும்.
  • விதி 1: "மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்" என்னும் விதிப்படி, மகர மெய் (ம்) அழிந்தது.
    • மரம் + கலம் à மர + கலம் (இப்போது 'மர' என்பது விதியால் வந்த உயிரீறு).
  • விதி 2: "இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்" என்னும் விதிப்படி, வல்லொற்று (க்) மிகுந்தது.
    • மர + க் + கலம் = மரக்கலம்.

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே.   (நன்னூல் - 165)

 

5. பூப்பெயர்ப் புணர்ச்சி

          வல்லின பூ என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் மெய்யெழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகுந்து புணர்வது மட்டுமன்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு. எனினும், மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.

          இனமான மெல்லின மெய மகுதலும் உண்டு. எனனும், மெல்லின் மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.

பூ + கொடி பூக்கொடி, பூங்கொடி

பூ + சோலை பூச்சோலை, பூஞ்சோலை

பூ + தொட்டி - பூத்தொட்டி, பூந்தொட்டி

பூ + பந்து பூப்பந்து, பூம்பந்து

பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும் (நன்னூல்-200)

 

6. மெய்யீற்றுப் புணர்ச்சி

          நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சியை மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.

          வாயொலி வாய் + ஒலி - 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி 'வாயொலி' எனப் புணர்ந்தது.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நன்னூல் - 204)

v  மண் + மகள் மண்மகள் என்பதில் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மெய்யெழுத்தாக நிற்க இயல்பாகப் புணர்ந்தது.

7. தனிக்குறில்முன் ஒற்று புணர்ச்சி

          நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல் உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும்.

          கல் + அதர் - கல்லதர் - தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

கல்ல் + அதர் - உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி கல்லதர் எனப் புணர்ந்த்து.

 

 

8. மகர ஈற்றுப் புணர்ச்சி

          நிலைமொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகரமெய் வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.

1.     மகரமெய் கெட்டுப் புணரும்

பாடம் + வேளை  - பாடவேளை

2.    மகரமெய் கெட்டு இன மெல்லெழுத்துத் தோன்றிப் புணரும்.

காலம் + கடந்தவன் à கால + கடந்தவன் à காலங்கடந்தவன்

3.    மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும்

பழம் + தோல் à பழ + தோல் à பழத்தோல்

மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் (நன்னூல்-219)

9. பண்புப்பெயர்ப் புணர்ச்சி

          பண்புப்பெயர்ச்சொல் நிலைமொழிச் சொல்லாக நின்று, வருமொழிச் சொல்லுடன் புணரும்போது பின்வரும் மாற்றங்களை அடையும். இதற்கான பொதுவான விதி "ஈறுபோதல்". இது தவிர, தேவைக்கேற்பப் பிற விதிகளும் பயன்படும்.

9.1  ஈறுபோதல் (மை விகுதி கெடுதல்)

   நிலைமொழியின் இறுதியில் உள்ள 'மை' விகுதி கெட்டுப் புணரும்.

  • பெருவழி = பெருமை + வழி
    • பெருமை + வழி à 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி 'மை' விகுதி கெட்டது.
    • = பெருவழி எனப் புணர்ந்தது.

9.2  இடை உகரம் இய்யாதல்

மை விகுதி கெட்டபின், நிலைமொழிச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாகத் திரியும்.

  • பெரியன் = பெருமை + அன்
    • பெருமை + அன் à பெரு + அன் (ஈறுபோதல்)
    • பெரு + அன் à பெரி + அன் ('இடை உகரம் இய்யாதல்' விதி)
    • பெரி + அன் à பெரி + ய் + அன் (உடம்படுமெய்)
    • = பெரியன் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே).

9.3  ஆதிநீடல்

மை விகுதி கெட்டபின், நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள குறில் எழுத்து நெடில் எழுத்தாக மாறும்.

  • மூதூர் = முதுமை + ஊர்
    • முதுமை + ஊர் à முது + ஊர் (ஈறுபோதல்)
    • முது + ஊர் à மூது + ஊர் ('ஆதிநீடல்' விதி)
    • மூது + ஊர் àமூத் + ஊர் (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்)
    • = மூதூர் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே).

9.4 அடி அகரம் ஐ ஆதல்

மை விகுதி கெட்டபின், நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள அகரம் ஐகாரமாக மாறும்.

  • பைந்தமிழ் = பசுமை + தமிழ்
    • பசுமை + தமிழ் à பசு + தமிழ் (ஈறுபோதல்)
    • பசு + தமிழ் à பைசு + தமிழ் ('அடி அகரம் ஐ ஆதல்' விதி)
    • பைசு + தமிழ் à பை + தமிழ் ('இனையவும்' விதிப்படி 'சு' கெட்டது)
    • பை + தமிழ் à பைந்தமிழ் (இனமிகல்).

9.5 தன்னொற்று இரட்டல்

மை விகுதி கெட்டபின், நிலைமொழியின் ஒற்று இரட்டிக்கும்.

  • நெட்டிலை = நெடுமை + இலை
    • நெடுமை + இலை à நெடு + இலை (ஈறுபோதல்)
    • நெடு + இலை à நெட்டு + இலை ('தன்னொற்று இரட்டல்' விதி)
    • நெட்டு + இலை à நெட்ட் + இலை (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்)
    • = நெட்டிலை (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே).

9.6  முன் நின்ற மெய் திரிதல்

மை விகுதி கெட்டபின், நிலைமொழியின் இறுதியில் நின்ற மெய், வருமொழிக்கு ஏற்பத் திரியும்.

  • செந்தமிழ் = செம்மை + தமிழ்
    • செம்மை + தமிழ் à செம் + தமிழ் (ஈறுபோதல்)
    • செம் + தமிழ் à செந்தமிழ் ('முன் நின்ற மெய் திரிதல்' விதிப்படி 'ம்', 'ந்' ஆகத் திரிந்தது).

9.7 இனமிகல்

மை விகுதி கெட்டபின், வருமொழி வல்லினத்திற்கு இனமான மெல்லினம் தோன்றும்.

  • கருங்கடல் = கருமை + கடல்
    • கருமை + கடல் à கரு + கடல் (ஈறுபோதல்)
    • கரு + கடல் à கருங்கடல் ('இனமிகல்' விதி).

9.8 இணையவும்

மை விகுதி கெட்டு நிற்கும் நிலைமொழி, மேற்கண்ட விதிகளில் அடங்காதபோது அல்லது பல விதிகள் தேவைப்படும்போது பயன்படுவது.

  • பைந்தளிர் = பசுமை + தளிர் (குறிப்பு: மூல உரையில் பசுந்தளிர் என இருந்தது, ஆனால் பைந்தளிர் என்பதே விதிகளுக்குப் பொருந்தும்).
    • பசுமை + தளிர் à பசு + தளிர் (ஈறுபோதல்)
    • பசு + தளிர் à பைசு + தளிர் (அடி அகரம் ஐ ஆதல்)
    • பைசு + தளிர் à பை + தளிர் ('இனையவும்' விதிப்படி 'சு' கெட்டது)
    • பை + தளிர் à பைந்தளிர் (இனமிகல்).

 

"ஈறுபோதல் இடையுகரம் இய்யாதல்

ஆதிநீடல் அடியகரம் ஐஆதல்

தன்னொற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல்

இனமிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே."

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!