பகுபதம் பகாபதம்
Ø
சொல்
என்பதை மொழி,
பதம், கிளவி என்றும் குறிப்பிடலாம்
v
சொற்கள்
பகுபதம் பகாபதம் என இருவகைப்படும்.
1.
பகாபதம்
என்பது பிரிக்க முடியாத தனிச்சொல் கல்,
படி, மண், செல்
2.
பகுபதம்
என்பது பிரிக்கக்கூடிய கூட்டுச் சொல் நடந்தான், பார்த்தல், கண்டேன்
தமிழில்
ஒரு சொல்லைப் பிரித்தால் பொருள் தருவது பகுபதம் எனப்படும்.
அந்தப்
பகுபதத்தின் உறுப்புகள் மொத்தம் ஆறு வகைப்படும்.
அவை:
1.
பகுதி
2.
விகுதி
3.
இடைநிலை
4.
சந்தி
5.
சாரியை
6.
விகாரம்
1. பகுதி
சொல்லின்
முதலில் நிற்கும்.
இது
கட்டளைச் சொல்லாக இருக்கும்.
பகுதிக்கு
வேறு பெயர் முதனிலை என்பதாகும்.
வினைப்
பகுபதத்தில் உள்ள பகுதி தொழிலை உணர்த்தும்
பிரித்தால்
பொருள் தரும்.
எடுத்துக்காட்டு:
படித்தான் என்பதில் 'படி' என்பது பகுதி.
படித்தான்
- படி+ த் + த் + ஆன் à படி - பகுதி
செய்தான்
- செய் + த் + ஆன் à செய் - பகுதி
2. விகுதி
சொல்லின்
இறுதியில் நிற்கும்.
விகுதிக்கு
வேறு பெயர் இறுதிநிலை என்பதாகும்.
வினைமுற்றுப்
பகுபதத்தில் வரும் விகுதி, திணை, பால், எண், இடம் உணர்த்தும்.
படித்தான்
-படி+ த் + த் +ஆன் à ஆன் - விகுதி ஆண்பால் உணர்த்திற்று.
படித்தது
-படி + த் +த் +அ+து à து- விகுதி ஒன்றன்பால் உணர்த்திற்று.
படித்தன-படி
+ த் + த் + அன் + அ à அ - விகுதி பலவின்பால் உணர்த்திற்று.
இது
திணை, பால்,
எண், இடம் அல்லது வியங்கோள், எச்சம் ஆகியவற்றை உணர்த்தும்.
|
வ.எண் |
வினைமுற்று வகை |
விகுதிகள் |
எடுத்துக்காட்டுகள் |
|
1 |
தன்மை ஒருமை |
ஏன், என் |
அறிந்தேன், அழைத்தனன் |
|
2 |
தன்மை பன்மை |
அம், ஓம் |
அறிந்தோம், உணர்ந்தனம் |
|
3 |
முன்னிலை ஒருமை |
இ, ஆய் |
கண்டாய், கூறிதி |
|
4 |
முன்னிலை பன்மை |
ஈர், மின், உம் |
செய்தீர், உண்மின், ஏகும் |
|
5 |
படர்க்கை. ஆண்பால் |
ஆன், அன் |
செய்தான், செய்தனன் |
|
6 |
படர்க்கை. பெண்பால் |
ஆள், அள் |
செய்தாள், செய்தனள் |
|
7 |
படர்க்கை. பலர்பால் |
ஆர், அர் |
செய்தார், செய்தனர் |
|
8 |
படர்க்கை. ஒன்றன்பால் |
து, று |
வந்தது, கூறிற்று |
|
9 |
படர்க்கை. பலவின்பால் |
அ, ஆ |
கறந்தன, கறவா (ஆ - எதிர்மறை) |
|
10 |
வியங்கோள் |
க, இய, இயர், இ |
வாழ்க, வாழிய, வாழியர், வாழி |
|
11 |
பெயரெச்சம் |
அ, உம் |
வந்த, ஓடும் |
|
12 |
வினையெச்சம் |
உ, இ, அ |
சென்று, கூறி, காண |
3. இடைநிலை
பகுதிக்கும்
விகுதிக்கும் இடையில் வரும்.
இது
பெரும்பாலும் காலம் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்)
காட்டும்.
எடுத்துக்காட்டு:
படித்தான் என்பதில் 'த்' (இறந்தகால இடைநிலை) என்பது இடைநிலை.
4. சந்தி
பெரும்பாலும்
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
புள்ளி
வைத்த மெய்யெழுத்துகளாக (த்,
ப், க்) இது வரும்.
எடுத்துக்காட்டு:
படித்தான் (படி + த் + த் + ஆன்) என்பதில் முதலில் வரும் 'த்'
சந்தி ஆகும்.
5. சாரியை
பெரும்பாலும்
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
இதற்குத்
தனிப்பொருள் இல்லை, ஆனால் சொல்லை இணைக்க உதவும். (அன், ஆன், இன் போன்றவை).
எடுத்துக்காட்டு:
வந்தனன் (வா + த்(ந்) + த் + அன் + அன்). இதில் இடையில் வரும் 'அன்' சாரியை.
6. விகாரம்
மேலே
உள்ள உறுப்புகள் சேரும்போது ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
எழுத்து
தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகியவை விகாரம்.
எடுத்துக்காட்டு:
வந்தான் (வா > வ என குறுகியது விகாரம்; த் > ந் என திரிந்தது விகாரம்).
ஓர்
எடுத்துக்காட்டு விளக்கம்
சொல் : வந்தனன்
இச்சொல்லைப் பிரிக்கும் முறை : வா
(வ) + த் (ந்) + த் + அன் + அன்
|
உறுப்பு |
விளக்கம் |
|
வா |
பகுதி ('வ' எனக் குறுகியது விகாரம்) |
|
த் |
சந்தி ('ந்' எனத் திரிந்தது விகாரம்) |
|
த் |
இறந்தகால இடைநிலை |
|
அன் |
சாரியை |
|
அன் |
ஆண்பால் வினைமுற்று
விகுதி |
.png)