🔔 LATEST
📚 Group 4 Results Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 06-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026 📚 Group 4 Results Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 06-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026

ஒருமை, பன்மை

Post

 


ஒருமை, பன்மை

1. 'அல்ல', 'அன்று' பயன்பாடு

          இக்காலத் தமிழில் 'அல்ல' என்ற சொல்லை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், இலக்கணப்படி இது தவறு.

  • 'அல்ல' என்பது அஃறிணைப் பன்மையை (Plural) குறிக்கும்.
  • 'அன்று' என்பது அஃறிணை ஒருமையை (Singular) குறிக்கும்.
  • உயர்திணைக்கு பால் அறிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

 

பிழை (தவறு)

திருத்தம் (சரி)

விளக்கம்

அது செடி அல்ல

அது செடி அன்று

(ஒருமை)

அவன் நல்லவன் அல்ல

அவன் நல்லவன் அல்லன்

(ஆண்பால்)

அவள் சிறியாள் அல்ல

அவள் சிறியாள் அல்லள்

(பெண்பால்)

நான் கற்றவன் அல்ல

நான் கற்றவன் அல்லேன்

(தன்மை ஒருமை)

அவர் தமிழர் அல்ல

அவர் தமிழர் அல்லர்

(பலர்பால்)

நாங்கள் ஏழைகள் அல்ல

நாங்கள் ஏழைகள் அல்லோம்

(தன்மை பன்மை)

நீ எனக்கு நண்பன் அல்ல

நீ எனக்கு நண்பன் அல்லை

(முன்னிலை ஒருமை)

2. தான், தாம், தன், தம் பயன்பாடு

  •   தான், தன்: ஒருமைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  •   தாம், தம்: பன்மைக்கு அல்லது உயர்வுக்குப் பயன்படுத்த வேண்டும்.

 

பிழை

திருத்தம்

இவர்தான் என் நண்பர்

இவர்தாம் என் நண்பர்

இவைதான் சிறந்தவை

இவைதாம் சிறந்தவை

கண்ணன் தம் வேலையைச் செய்தான்

கண்ணன் தன் வேலையைச் செய்தான்

பறவைகள் தன் இரையைத் தானே தேடிக் கொள்ளும்

பறவைகள் தம் இரையைத் தாமே தேடிக் கொள்ளும்

3. எதிர்மறை வினைமுற்று (அஃறிணை)

          எதிர்மறை வாக்கியங்களில் ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் விகுதிகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

  • 'து' விகுதி - ஒன்றன்பால் (ஒருமை)
  • '' விகுதி - பலவின்பால் (பன்மை)

பிழை

திருத்தம்

இன்று வண்டிகள் ஓடாது

இன்று வண்டிகள் ஓடா

ஆடுகள் பயிரை மேயாது

ஆடுகள் பயிரை மேயா

மலர்கள் வாடாது

மலர்கள் வாடா

புலிகள் புல்லைத் தின்னாது

புலிகள் புல்லைத் தின்னா

மான்கள் நில்லாது

மான்கள் நில்லா

மாடுகள் துள்ளாது

மாடுகள் துள்ளா

4. உடன்பாட்டுப் பன்மை (வினைமுற்று)

          அஃறிணையில் எழுவாய் பன்மையாக இருந்தால், வினைமுற்றும் பன்மையாக   ('' விகுதி பெற்று) இருக்க வேண்டும்.

பிழை

திருத்தம்

பூக்கள் பூத்தது

பூக்கள் பூத்தன

மாடுகள் வந்தது

மாடுகள் வந்தன

மீன்கள் துள்ளுகின்றது

மீன்கள் துள்ளுகின்றன

அணைகள் நிரம்பியது

அணைகள் நிரம்பின

5. திணை மற்றும் எழுவாய் - பயனிலை பொருத்தம்

          எழுவாய் உயர்திணையாக இருந்தால், பயனிலையும் உயர்திணையாக இருக்க வேண்டும். அஃறிணைச் சொற்களைப் (வருவது, சொன்னது) பயன்படுத்தக் கூடாது.

  • பிழை: அங்கே வருவது யாரோ?
  • திருத்தம்: அங்கே வருபவர் (அ) வருபவன் (அ) வருபவள் யாரோ?
  • பிழை: சொன்னது நீதானா?
  • திருத்தம்: சொன்னவன் நீதானா?

6. ஒரு, ஓர் - பயன்பாடு

  • ஒரு: உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் (எ.கா: க, , , ப...).
  • ஓர்: உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் (எ.கா: அ, , , ஈ...).

 

பிழை

திருத்தம்

ஒரு இலை

ஓர் இலை

ஒரு அரசன்

ஓர் அரசன்

ஒரு ஏணி

ஓர் ஏணி

ஓர் பரிசு

ஒரு பரிசு

ஓர் குடும்பம்

ஒரு குடும்பம்

ஓர் வீடு

ஒரு வீடு

7. இது/இஃது மற்றும் அது/அஃது

  • இது, அது: வருமொழி முதலில் உயிர்மெய் எழுத்து இருந்தால் வரும்.
  • இஃது, அஃது: வருமொழி முதலில் உயிர் எழுத்து (அ, ஆ...) இருந்தால் வரும்.

பிழை

திருத்தம்

இது என் வீடு

இஃது என் வீடு

அது இந்தியாவின் பெருமை

அஃது இந்தியாவின் பெருமை

இஃது நமது நாடு

இது நமது நாடு

அஃது நல்ல மருந்து

அது நல்ல மருந்து

8. பல, சில - பயன்பாடு

          'பல', 'சில' என்பவை அஃறிணைச் சொற்கள். இவற்றை உயர்திணைப் பெயருக்கு முன் அடைமொழியாகப் பயன்படுத்தக் கூடாது.

பிழை

திருத்தம்

எனக்குப் பல நண்பர்கள் உள்ளனர்

எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர்

விழாவுக்குச் சில பெண்கள் வந்திருந்தனர்

விழாவுக்குப் பெண்கள் சிலர் வந்திருந்தனர்

பல தலைவர்களுள் இவரும் ஒருவர்

தலைவர்கள் பலருள் இவரும் ஒருவர்

9. எதிர்மறை வினைமுற்று அட்டவணை

இடம்

பால்

ஒருமை

பன்மை

தன்மை

-

நான் அல்லேன்

நாம் அல்லோம்

முன்னிலை

-

நீ அல்லை

நீவிர் அல்லீர்

படர்க்கை

ஆண்பால்

அவன் அல்லன்

-

படர்க்கை

பெண்பால்

அவள் அல்லள்

-

படர்க்கை

பலர்பால்

-

அவர் அல்லர்

படர்க்கை

ஒன்றன்பால்

அஃது அன்று

-

படர்க்கை

பலவின்பால்

-

அவை அல்ல

 







10. ஒருமை - பன்மை பிழைகள் (பிற)

          'ஒவ்வொரு' பயன்பாடு: 'ஒவ்வொரு' என்பது ஒருமையைக் குறிக்கும் சொல். எனவே, அதனோடு வரும் பெயர்ச்சொல் ஒருமையில் இருக்க வேண்டும்.

  • பிழை: ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது.
  • திருத்தம்: ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.

கள் விகுதி:

  • உயர்திணை : பன்மைக்கு 'கள்' விகுதி அல்லது 'அர்' விகுதி கட்டாயம்.                        (எ.கா: மனிதர்கள், மாணவர்கள்).
  • அஃறிணை: தற்காலத் தமிழில் 'கள்' விகுதி கட்டாயமில்லை.                                           (எ.கா: பத்துத் தேங்காய் - சரி). ஆனால் எழுவாயில் பன்மை இருந்தால், வினைமுற்றில் காட்ட வேண்டும் (பத்து மரங்கள் வீழ்ந்தன).

💬 Comments

Chat with us!