🔔 LATEST
📚 Group 2 Notification Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 27-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 27-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026

இன எழுத்துகள்

Post

 


இன எழுத்துகள்

ஒலிக்கும் முயற்சி மற்றும் பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் 'இன எழுத்துகள்' எனப்படும்.

 மெய் எழுத்துகளின் இனம்: வல்லின மெய் எழுத்துகளுக்கு மெல்லின மெய் எழுத்துகள் இனமாக வரும்.

வல்லினம்

மெல்லினம்

எடுத்துக்காட்டு

க்

ங்

திங்கள்

ச்

ஞ்

மஞ்சள்

ட்

ண்

மண்டபம்

த்

ந்

சந்தனம்

ப்

ம்

அம்பு

ற்

ன்

தென்றல்

உயிர் எழுத்துகளின் இனம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும்.


v  அ - ஆ

v  இ - ஈ

v  உ - ஊ

v  எ - ஏ

v  ஒ - ஓ


*        சிறப்பு இன எழுத்துகள்:

'' என்னும் எழுத்துக்கு '' இன எழுத்து ஆகும்.

'' என்னும் எழுத்துக்கு '' இன எழுத்து ஆகும்.

*        தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை.

*        வல்லினத்திற்கு  மெல்லினம் இன எழுத்தாகும்.

*        இடையினம் என்பது ஒரே இனமாகும். 

*        முக்கிய குறிப்பு:

சொல்லின் இடையில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவதில்லை.

ஆனால், அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்.

எ.கா: ஓஒதல், தூஉம், தழீஇ.

💬 Comments

Chat with us!
📷 Add image URL in config