🔔 LATEST
📚 Group 2 Notification Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 27-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 27-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026

தமிழ் இலக்கணம் - சொல்

Post



தமிழ் இலக்கணம் - சொல்

          ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ  ஒரு பொருளை உணர்த்துவது 'சொல்' எனப்படும்.

எ.கா : கை, பூ - இவை ஓரெழுத்து ஒருமொழி

          கல்வி, மரம் - பல எழுத்துக்கள்

சொல்லின் வேறு பெயர்கள்:

  • பதம்: ஒரு சொல் ஒரு பொருளைத் தருவது.
  • மொழி: கருத்தை வெளிப்படுத்துவது.
  • கிளவி: சொல்லப்படுவது (பேசப்படுவது).

சொல்லின் பொதுவான தன்மைகள் (பண்புகள்)

சொற்கள் பொதுவாக நான்கு தன்மைகளைக் கொண்டிருக்கும்:

  1. இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை) குறிக்கும்.
  2. ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்) காட்டும்.
  3. மூன்று இடங்களிலும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) வரும்.
  4. உலக வழக்கிலும் (பேச்சு மொழி), செய்யுள் வழக்கிலும் (இலக்கிய மொழி) பயின்று வரும்.
  5. வெளிப்படையாகவும் (பொருள் நேரடியாகத் தெரிவது), குறிப்பாகவும் (சூழ்நிலையைப் பொறுத்துப் பொருள் கொள்வது) வரும்.

நால்வகைச் சொற்கள் (இலக்கண வகை)

இலக்கண வகையில் சொல் நான்கு வகைப்படும்.

  • 1.     பெயர்ச்சொல்
  • 2.    வினைச்சொல்
  • 3.    இடைச்சொல்
  • 4.    உரிச்சொல்


💬 Comments

Chat with us!
📷 Add image URL in config